தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

புரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவன் மூச்சுத்திணறி மரணம் - சென்னை செய்திகள்

மூச்சுத்திணறல் ஏற்பட்டு கல்லூரி மாணவன் இறந்ததையடுத்து, புரோட்டா சாப்பிட்டதால் இறந்துபோனாரா எனக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

parotta-death
parotta-death

By

Published : Oct 15, 2021, 1:59 PM IST

சென்னை: கொளத்தூர் விவி நகர் ஐந்தாவது தெருவைச் சேர்ந்தவர் அரியகுட்டி. இவரது மகன் சிபி சங்கமித்ரன் (17). அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு ஆன்லைன் வகுப்பில் படித்துவந்தார்.

நேற்றிரவு (அக். 14) கடையில் புரோட்டா சாப்பிட்டுவிட்டு 10 மணி அளவில் வீட்டிற்கு வந்தார். அதிகாலையில் சிபி சங்மித்ரனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பெற்றோர் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து பரிசோதித்துப் பார்த்தபோது சங்கமித்ரன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பெற்றோர் தனியார் வாகனத்தில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். உடற்கூராய்வு செய்வதற்காக உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து கொளத்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். புரோட்டா சாப்பிட்டதால்தான் கல்லூரி மாணவன் சிபி சங்கமித்ரன் இறந்து போனாரா? இல்லை வேறு ஏதும் காரணங்கள் உள்ளனவா? என்பது தொடர்பாக உடற்கூராய்வு முடிவில்தான் தெரியவரும் எனக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:விஜயதசமி வித்யாரம்பம்; கல்வியை தொடங்கிய குழந்தைகள்

ABOUT THE AUTHOR

...view details