தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை...  பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்... - students sexually harrased

திருவேற்காட்டில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வந்தாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளி முன் குவிந்த பெற்றோர்

By

Published : Sep 29, 2022, 4:21 PM IST

சென்னை: திருவேற்காட்டில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் இரண்டு மாணவிகளிடம் அந்த வகுப்பு ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பெற்றோர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவேற்காடு போலீசாரிடம் புகார் அளிக்க சென்றுள்ளனர். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் பள்ளியின் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர் தற்காலிக பனியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தலைமை ஆசிரியர் சார்பில் கடிதம் ஒன்று அவர்களுக்கு அளிக்கப்பட்டது.

இதையடுத்து பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் கல்வித்துறை சார்பில் இருந்து முழுமையான நடவடிக்கை எடுக்கும் வரை தொடர்ந்து தற்காலிக பணியிடை நீக்கத்தில் இருப்பார் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு - 64 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

ABOUT THE AUTHOR

...view details