சென்னை: நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்துவரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் செப்.1ஆம் தேதி முதல்கட்டமாக, 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இதையடுத்து நவம்பர் 1ஆம் தேதி முதல், 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மை அறிதல், வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்தல், பழுது பார்ப்பு உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இதனிடையே, புதிதாக பள்ளிக்கு வரும் 1ஆம் வகுப்பு மாணவர்களுடன் பெற்றோரும் அமர்ந்து அவர்களை கவனிக்க அனுமதி வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.