தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு 300 க்கும் அதிகமான துணை ராணுவப் படையினர் சென்னைக்கு வந்துள்ளனர். இவர்கள் முதற்கட்டமாக, சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் காவல்துறையினருடன் இணைந்து அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
சென்னையில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு! - துணை ராணுவம்
சென்னை: மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக சென்னைக்கு வந்துள்ள துணை ராணுவப்படையினர், திருவல்லிக்கேணி பகுதியில் அணிவகுப்பு நடத்தினர்.
பதற்றமான வாக்குச்சாவடிகளான காசிமேடு, எண்ணூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, தி.நகர் போன்ற பகுதிகளில் எந்தவொரு அசம்பாவிதமும் இல்லாமல் பொதுமக்கள் நிம்மதியாக வாக்களிக்கும் வகையில், துணை ராணுவத்தினருடன் இணைந்து காவல்துறையினரும் தகுந்த பாதுகாப்பு அளிப்பார்கள் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.