சென்னையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 24 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக கூறியதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழுவில் இருந்து வெளியேறினர். இந்த நிலையில் நாளை டெல்லியில் குடியரசுத் தலைவர் பதவிக்கு பாஜக கூட்டணிக் கட்சி சார்பாக திரௌபதி முர்மு என்பவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
இதற்காக பாஜக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால இன்று இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து 9 மணி அளவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்தரநாத், எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், கோபாலகிருஷ்ணன் ஆகிய 4 பேர் டெல்லி புறப்பட்டு சென்றனர்.