தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாரத தேசத்தின் பாதுகாவலர் பிரதமர் மோடி - ஓபிஎஸ் புகழாரம்! - Amma's govt news

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி பாரத தேசத்தின் பாதுகாவலர், பாமரர்களின் சேவகர் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார்.

பாரத தேசத்தின் பாதுகாவலர் பிரதமர் மோடி -ஓபிஎஸ் புகழாரம்!
பாரத தேசத்தின் பாதுகாவலர் பிரதமர் மோடி -ஓபிஎஸ் புகழாரம்!

By

Published : Feb 14, 2021, 1:03 PM IST

சென்னை வந்துள்ள பிரதமர் மோடி நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டுள்ளார். விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வரவேற்புரை ஆற்றினார்.

அதில், 'பிரதமர் நரேந்திர மோடி பாரத தேசத்தின் பாதுகாவலர், பாமரர்களின் சேவகர். பிரதமர் மோடி போன்ற ஒப்பற்ற தலைவரைக் காண்பது அரிது. பல தலைமுறைகளாக நமது தேசம் கண்டிராத தன்னிகரற்ற தலைவர்.

அதுமட்டுமின்றி அம்மாவின் ஆட்சியை தமிழ்நாட்டில் நிலைநிறுத்தபாடுபட்டவர். எதிர்க்கட்சியினராக இருந்தாலும், நல்லவற்றை பாராட்டத் தவறாதவர்' எனப் புகழாரம் சூட்டினார்.

ஓ பன்னீர்செல்வம் வரவேற்புரை

மேலும், 'மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயலாற்றி வருகின்றன. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கியதற்கு நன்றி. காவிரி பிரச்னை உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்தது' என ஓபிஎஸ் தெரிவித்தார்.

இதையும் படிங்க...சென்னையில் பிரதமர் மோடி: செய்திகள் உடனுக்குடன்!

ABOUT THE AUTHOR

...view details