தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

"ஈபிஎஸ்ஸை அதிமுகவிலிருந்து நான் நீக்குகிறேன்" - ஓபிஎஸ் - எடப்பாடி பழனிச்சாமியை கட்சியிலிருந்து நீக்குவதாக ஓ பன்னீர்செல்வம் தகவல்

அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கே.பி.முனுசாமியை தான் நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

By

Published : Jul 11, 2022, 12:38 PM IST

சென்னை:வானகரத்தில் இன்று (ஜூலை 11) நடந்த அதிமுக பொதுக்குழுவில்ஓ.பன்னீர்செல்வத்தை பொருளாளர் மற்றும் அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அவர் கட்சியின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளும் எதிராக செயல்பட்டதாக பன்னீர்செல்வத்திற்கு கண்டனம் தெரிவித்து நத்தம் விஸ்வநாதன் இந்த சிறப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார்.

இதற்கிடையே, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், 'அதிமுக தொண்டர்கள் என்னை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்துள்ளனர். என்னை கட்சியிலிருந்து நீக்குவதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கோ அல்லது கே.பி.முனுசாமிக்கோ எந்த ஒரு அதிகாரமும் இல்லை.

கட்சி சட்ட விதிகளுக்கு உட்படாமல், என்னை கட்சியிலிருந்து நீக்கியதற்கு ஒருங்கிணைப்பாளராக நான் இபிஎஸ் மற்றும் கேபி முனுசாமியை கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இருந்து நீக்குகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி, கே.பி.முனுசாமியை அதிமுகவிலிருந்து நீக்குவதாக ஓபிஎஸ் தகவல்

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு 2.0: கட்சியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம் - சிறப்பு தீர்மானம் தாக்கல்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details