தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டு நலனுக்காக உலக வங்கியில் துணை முதலமைச்சர் ஆலோசனை!

சென்னை: அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வீட்டுவசதி, போக்குவரத்து மேம்பாடு தொடர்பாக உலக வங்கியின் அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

OPS

By

Published : Nov 14, 2019, 11:23 PM IST

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த 11ஆம் தேதி சிகாகோ நகரில் "அமெரிக்க பல இன கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற 'உலகளாவிய சமூக ஆஸ்கர் விருது- 2019' விழாவில் 'சர்வதேச வளரும் நட்சத்திரம் ஆசியா விருதை' ஓ. பன்னீர்செல்வம் பெற்றார்.

இதனிடையே, துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம் வாஷிங்டன் நகரில் உள்ள உலக வங்கியின் தலைமை அலுவலகத்திற்குச் சென்று சிறப்பு ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டின் குடிநீர், வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து மேம்பாட்டு திட்டங்களுக்குத் தேவையான நிதி உதவிகளைப் பெறுவதற்கான இந்த ஆலோசனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிகழ்வின் போது உலக வங்கி செயல் இயக்குநர் செல்வி அபர்ணா, தமிழ்நாடு நிதித்துறை முதன்மைச்செயலாளர் கிருஷ்ணன் மற்றும் உலக வங்கி அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஆலோசனையில் பன்னீர்செல்வம்

இதைத்தொடர்ந்து ஹூஸ்டன் நகரில் தமிழ்நாட்டில் முதலீடு செய்வது தொடர்பாக தொழில் முனைவோர் மத்தியில் உரையாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘ஸ்டாலின் நாக்கில் சனி’ - அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு

ABOUT THE AUTHOR

...view details