சென்னை:வள்ளுவர் கோட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்திருத்ததை திரும்பப்பெறக் கோரி தன்னாட்சி அமைப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் சார்பாக நேற்று (ஜூன் 25) போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த தன்னாட்சி அமைப்பின் இணை செயலாளர் சிவா, 'எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், உள்ளாட்சி அமைப்புகளின் சட்டத்திருத்தம் கொண்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு அரசால் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் பிரிவு 104,106-இல் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
சட்டப்பிரிவு 104, 106-யைத் திரும்பப் பெற கோரிக்கை இதில், ஊராட்சி செயலாளர்களை இடமாற்றம் செய்யும் மற்றும் தண்டிக்கும் உரிமைகளை உள்ளாட்சி அமைப்புகள் இழக்கின்றது. இதனால், ஊராட்சி மன்ற தலைவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. இதனை எதிர்த்து அரசு அலுவலர்களிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கைகள் எடுக்கவில்லை.
ஏழை எளிய மக்கள் பயன் பெறக்கூடிய, பட்டா சிட்டா போன்ற செயல்பாடுகளில் அதிகளவு ஊழல் நடக்கிறது. ஊராட்சி செயலாளருக்கு அதிகளவில் அதிகாரம் அளிப்பதால் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட கூடிய பிரதிநிகளின் உரிமை சுரண்டப்படுகிறது. எனவே, சட்டப்பிரிவு 104, 106-ஐ உடனடியாக அரசு திரும்பப்பெற வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இதையும் படிங்க: நாங்கள் ஒருவேளையாவது சாப்பிட வேண்டாமா? திருநங்கைகள் கண்ணீர்!