தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நெடுஞ்சாலையில் கரோனா ஓவியம் வரைந்து விழிப்புணர்வு! - Pammal coronavirus awareness painting

சென்னை: பம்மல் நெடுஞ்சாலையில் மிகப்பெரிய அளவில் கரோனா ஓவியம் வரைந்து, மக்களிடம் கரோனா குறித்த விழிப்புணர்வை தன்னார்வலர்கள் ஏற்படுத்தினர்.

corona
corona

By

Published : Apr 30, 2020, 11:59 AM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவி வருவதால், வைரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டுகிறது. அதுமட்டுமின்றி சமூகச் செயற்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள் எனப் பலரும் நெடுஞ்சாலைகளில் கரோனா வைரஸ் ஓவியம் வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் நெடுஞ்சாலையில் அப்பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர் சிவா, அவரது குழுவினர் கரோனா ஓவியம் தீட்டி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

விழிப்புணர்வு கரோனா ஓவியம்

மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர் ஆகியோர் பொதுமக்களை கரோனா பாதிப்பிலிருந்து காப்பாற்றுவதுபோல் இந்த ஓவியம் தீட்டப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:ஓவியம் வரைந்து கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவலர்கள்!

ABOUT THE AUTHOR

...view details