சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர்கள் பல்வேறு முறைகளில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் அனகாபுத்தூர், பம்மல் பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
தறி நெய்து வாக்குச் சேகரித்த அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன்! - தமிழ்நாடு தேர்தல் 2021
சென்னை: பல்லாவரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் நெசவாளர்களிடம் வாக்குச் சேகரிக்கச் சென்றுபோது தறி நெய்து ஆதரவு கோரினார்.
pallavaram
அப்போது நெசவாளர்களிடம் வாக்குச் சேகரிக்க தறி நெய்யும் இடத்திற்குச் சென்று வாக்குச் சேகரித்தார். அப்போது நெசவாளர்களின் பணியை அறிந்துகொள்ளும் வகையில் வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தறி நெய்து ஆதரவு கோரினார்.
அப்போது நெசவாளர்களிடம் பேசிய, ராஜேந்திரன் அதிமுக அரசு நெசவாளர்களுக்கு எண்ணற்ற சாதனை செய்துள்ளதாகவும், எனவே மீண்டும் தமிழ்நாடு அரசு ஆட்சிக்கு வர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு நெசவாளர்களிடம் கேட்டுகொண்டார்.
இதையும் படிங்க: பாஜக வேட்பாளரை சிறைபிடித்த திமுகவினர் மீது புகார்