சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை மூன்றாவது தெருவில் தனியார் பெயின்ட் கிடங்கு அமைந்துள்ளது. அங்கு பெயிண்ட், டின்னர் போன்ற பல்வேறு பொருடள்கள் தயாரிக்கப் பயன்படும் ராசாயனங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மின் கசிவினால் கிடங்கில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது.
பெயின்ட் கிடங்கில் பயங்கர தீ விபத்து - அம்பத்தூர் பெயின்ட் கிடங்கில் பயங்கரத் தீ
சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டை பெயிண்ட் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்துர் தொழிற்பேட்டை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையாகப் போராடினர். ஆனால் தீ கட்டுக்குள் வராததால் ஆவடி, வில்லிவாக்கம், ஜெ.ஜே.நகர் போன்ற பகுதிகளிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
இந்தியாவில் கரோனா பாதிப்பு 370ஆக உயர்வு!
இருப்பினும் இந்த விபத்தில் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமான பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகி இருக்கலாமென கூறப்படுகிறது. இந்த விபத்தால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாகக் காட்சியளித்தது. இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.