சென்னை:தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்.19ஆம் தேதி நடைபெற உள்ளது. பிப்.22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்குச்சாவடிகளில் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. முன்னதாக தமிழ்நாடு அரசு, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நாளில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பொதுவிடுமுறை அளித்து உத்தரவிட்டது.