கோடை விடுமுறை முடிந்து இன்று பெருவாரியான கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் சென்னை மாநகர் முழுவதும் போக்குவரத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக போக்குவரத்து காவல்துறையினர் தரப்பில் தெரிவித்தனர்.
பச்சையப்பன் மாணவர்கள் கல்லூரி முதல் நாள் கொண்டாட்டத்தில் ஆரவாரம்! - college first day
சென்னை: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இன்று முதல் நாள் கல்லூரி திறப்பை கொண்டாடும் விதமாக, பேருந்தை அலங்கரித்து அதன் கூரை மேல் ஏறி கல்லூரிக்கு சென்றனர்.
கல்லூரி முதல் நாள் கொண்டாட்டத்தில் பச்சையப்பன் மாணவர்கள்!
இந்நிலையில் இன்று முதல் நாள் கல்லூரி திறப்பை கொண்டாடும் விதமாக பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், அயனாவரத்தில் இருந்து ஆவடி செல்லும் வழித்தட பேருந்தை அலங்கரித்து, அதன் மேல் கூரையில் ஏறி கல்லூரிக்கு ஆரவாரத்துடன் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.