கரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிவரும் நிலையில், தடுப்பூசி போடும் பணி தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை மொத்தம் ஒன்பது கோடியே 43 லட்சத்து 34 ஆயிரத்து 262 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி நேற்று கரோனா தடுப்பூசியின் இரண்டாவது தவணையைச் (டோஸ்) செலுத்திக்கொண்டார்.
மருத்துவ வல்லுநர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்திவருகின்றனர்.