சென்னை:முறைகேடாக ரூ.50 லஞ்சம் பெற்றுக்கொண்டு சீன நாட்டினருக்கு விசா வாங்கி கொடுத்த விவகாரத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு தொடர்புடைய 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2010 - 2014 ஆம் ஆண்டு காலகட்டத்தின் போது கார்த்தி சிதம்பரம் நடத்திய நிறுவனங்களுக்கு வெளிநாட்டிலிருந்து முறைகேடான வழிகளில் பணம் கிடைத்தது தொடர்பாக சிபிஐ சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. கார்த்தி சிதம்பரத்தின் சொந்த தொகுதியான சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அவரது இல்லம் மற்றும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் சிபிஐ அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.