சென்னை: மூத்த வாக்காளர் பழனியப்ப செட்டியார் மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மூத்த வாக்காளர் பழனியப்ப செட்டியார் மரணம்: ப. சிதம்பரம் இரங்கல் - ப சிதம்பரம் இரங்கல்
சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின் மூத்த வாக்காளர் ராயவரம் எம்.ஏ.எம். பழனியப்ப செட்டியார் 107 வயதில் இன்று இயற்கை எய்தினார். அதற்கு காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மூத்த வாக்காளர் பழனியப்பச் செட்டியார் மறைவிற்கு முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், “சிவகங்கை மக்களவைத் தொகுதியின் மூத்த வாக்காளர் ராயவரம் எம்.ஏ.எம். பழனியப்ப செட்டியார் 107ஆவது வயதில் இன்று இயற்கை எய்தினார்.
அவர் தொழிலதிபரும், தமிழன்பரும் ஆவார். அவருடைய குடும்பத்தினர் பள்ளி, பாலிடெக்னிக் தொடங்கி நடத்திவருகிறார்கள். அவருடைய மறைவு அவரை அறிந்த எல்லோருக்கும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.