தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரயில் மூலம் ஆக்சிஜன் - தமிழ்நாடு அரசிடம் இருந்து கோரிக்கை வரவில்லை - தெற்கு ரயில்வே - Chennai

ரயில் மூலம் ஆக்சிஜன் கொண்டு செல்வது தொடர்பாக தமிழ்நாடு அரசிடமிருந்து கோரிக்கை வரவில்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது

தெற்கு ரயில்வே
தெற்கு ரயில்வே

By

Published : Apr 28, 2021, 6:23 PM IST

Updated : Apr 28, 2021, 6:52 PM IST

நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், பல்வேறு பகுதிகளுக்கு ரயில் மூலமாக ஆக்சிஜன் கொண்டுசெல்லப்படுகிறது. இவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படுகிறது.

தெற்கு ரயில்வே துறை தெரிவித்திருப்பதாவது,

'உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இதுவரை ஒட்டுமொத்தமாக 510 மெட்ரிக் டன் ஆக்சிஜன், ரயில் மூலமாக கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

கொண்டுசெல்லப்பட்ட ஆக்சிஜன் அளவுகள்

  • உத்தரப்பிரதேசத்தில் 202 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனும்,
  • மகாராஷ்டிராவுக்கு 174 மெட்ரிக் டன் ஆக்சிஜனும்,
  • டெல்லிக்கு இதுவரை 70 மெட்ரிக் டன் ஆக்சிஜனும்,
  • மத்தியப் பிரதேசத்துக்கு 64 மெட்ரிக் டன் ஆக்சிஜனும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
    தெற்கு ரயில்வே

அதே நேரத்தில், தமிழ்நாட்டிற்கு இதுவரை ஆக்சிஜன் ஏதும் ரயில் மூலமாக எடுத்து வரப்படவில்லை. தமிழ்நாடு, கேரள மாநில அரசுகள் இதுவரை ஆக்சிஜன் கொண்டுவருவது மற்றும் வெளி மாநிலங்களுக்கு எடுத்துச்செல்ல எந்த கோரிக்கையும் வைக்கவில்லை' என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Last Updated : Apr 28, 2021, 6:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details