தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அமமுக - ஓவைசி கூட்டணி புதுவையிலும் தொடரும்! - டிடிவி.தினகரன் - ஏஐஎம்ஐஎம்

சென்னை: ஓவைசியுடனான அமமுகவின் கூட்டணி புதுச்சேரியிலும் தொடரும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.

ttv owaisi
ttv owaisi

By

Published : Mar 9, 2021, 2:46 PM IST

தேர்தலில் அதிமுக தோல்வியுற்றால், அது அந்தந்த கட்சியின் தலைமைக்கு தெரியும் என்றும் கடன் சுமைகளில் தமிழகம் தள்ளாடி கொண்டிருக்கிறது, இப்படி இருக்க, மக்களை ஏமாற்றி எப்படியாவது வெற்றிபெற வேண்டுமென்பது இவர்களின் நோக்கம் எனவும், இவர்கள் அறவிக்கின்ற திட்டங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பில்லை எனவும் உவைசியுடன் அமமுக கூட்டனி புதுவையிலும் தொடரும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் இன்று இரண்டாம் நாள் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு நேர்காணலை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி. தினகரன், “வரும் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடவுள்ளேன். எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும்.

இத்தேர்தலில் ஓவைசியுடன் இணைந்து அமமுக சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. இக்கூட்டணி புதுச்சேரியிலும் தொடரும். வரும் 12 ஆம் தேதி ராயபேட்டை மைதானத்தில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற உள்ளது” என்றார்.

இதையும் படிங்க: மார்ச் 12ஆம் தேதி அமமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details