சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 8,238 தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்தப் பள்ளிகளில் 94 ஆயிரத்து 256 மாணவர்கள் சேர்வதற்கான இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சேர்வதற்காக ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 175 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
பள்ளியில் உள்ள இடங்களுக்கு குறைவாக விண்ணப்பித்திருந்த மாணவர்களில் தகுதியானவர்கள் பட்டியல் 28ஆம் தேதி வெளியிடப்பட்டன. 8 ஆயிரத்து 234 பள்ளிகளில் 2,234 பள்ளிகளில் சேர்வதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு 28 ஆம் தேதி இடங்கள் ஒதுக்கப்பட்டு பள்ளிகளில் சேர்வதற்கான பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளியில் உள்ள இடங்களுக்கு கூடுதலாக மாணவர்களை சேர்க்க விண்ணப்பித்திருந்த 6 ஆயிரம் பள்ளிகளில் நேற்று (மே.30) குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.