கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் 156 சோதனைச் சாவடிகள் அமைத்தும், கார், இருசக்கர வாகனங்கள் மூலமாகவும் காவல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து பொதுமக்கள் ஒருவரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது எனவும், மீறி வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் ஆணையர் தெரிவித்திருந்தார். ஆனால் இதனை மீறி சென்னையில் வாகனங்களிலும், சாலைகளிலும் பொதுமக்கள் சுற்றியதால் அவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
ஊரடங்கின் இரண்டாம் நாளான இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் 144 தடை உத்தரவை மீறியதாக 279 வழக்குகளும், சாலைகளில் சுற்றியதற்காக 3 வழக்குகளும், கரோனா குறித்த வதந்தி பரப்பியதற்காக 1 வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரே நாளில் தடையை மீறி சுற்றியதாகக் கூறி 1,400 வழக்குகள் பதிவு! - சென்னையில் ஒரே நாளில் தடையை மீறி சுற்றியதாகக் கூறி 1,400 வழக்குகள் பதிவு
சென்னை: இன்று தடையை மீறி வெளியில் சுற்றியதாகக் கூறி மொத்தம் 1,400 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Over 1,400 cases registered in Chennai
மேலும் இந்த வழக்குகளில் தொடர்புடைய 119 இருசக்கர வாகனங்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதவிர போக்குவரத்து விதிகளை மீறியதாக 600 வழக்குகளும் பதியப்பட்டு மொத்தம் ஒரே நாளில் 1,400 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.