தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்  பொருட்கள் பறிமுதல்... - Over 1250 kg of banned plastic products seized

சென்னை: தாம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற சோதனையில், தடை செய்யப்பட்ட சுமார் 1250கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

plastic

By

Published : Nov 22, 2019, 8:27 PM IST

ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பூமிக்கு கேடு விளைவிக்கின்றன. எனவே, இதைப் பயன்படுத்த மத்திய மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.

அதனைத் தொடர்ந்து கடைகளில் விற்கப்படும் பிளாஸ்டிக் பொருள்களை அலுவலர்கள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை தாம்பரம் நகராட்சிபட்ட முத்துரங்க ரோடு,சண்முகரோடு உள்ளிட்ட பஜார் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பதாக காவல்துறையினருக்குத் தகவல் வந்தது.

இதையடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனையாகிறதா என்பது குறித்து சோதனை நடைபெற்றது. நகராட்சிக்குட்ட்பட்ட 28 கடைகளில் அலுவலர்கள் ஆய்வில் ஈடுப்பட்டனர்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

ஆய்வின்போது, கடைகளிலிருந்து 1250கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடையின் உரிமையாளர்களுக்கு 28,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: பொள்ளாச்சியில் ரூ.10லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details