வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பலர், கடந்த எட்டு நாட்களாக விருப்ப மனுக்களை கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பெற்று வருகின்றனர். இதுவரை 6 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் விருப்ப மனுக்கள் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், முகூர்த்த நாள் என்பதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் இன்று ஒரே நாளில், அண்ணா அறிவாலயத்தில் குவிந்தனர். பல்வேறு மாவட்ட நிர்வாகிகளும் தங்களது ஆதரவாளர்களுடன் மேள தாளங்களுடன் வந்து, தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற்றும், தாக்கல் செய்தும் சென்றனர்.
குறிப்பாக, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் இன்று விருப்ப மனு தாக்கல் செய்தனர். மார்ச் மாத முதல் வாரத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்துவார் என்று கூறப்படுகிறது.
களைகட்டிய அண்ணா அறிவாலயம்! - ஒரே நாளில் 1,000க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு! மாநிலம் முழுவதிலுமிருந்து திமுகவினர் இன்று தங்களது ஆதரவாளர்களுடன் கார்களில் கட்சி அலுவலகம் வந்திருந்ததால், அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க:ஸ்டாலின் நிம்மதியாகவே இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு