தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மக்கள் யார் பக்கம் என்பதை தேர்தல் முடிவுகள் காண்பிக்கும் - ஓபிஎஸ் - O Panneerselvam on by election

இடைத்தேர்தல் நடைபெற்ற இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளிலும் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்று, தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

panneerselvam

By

Published : Oct 24, 2019, 2:35 AM IST

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், "இடைத்தேர்தல் நடந்து முடிந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளிலும் அதிமுக மகத்தான வெற்றிபெறும். இந்த வெற்றியின் மூலம் மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர் என்பது தெரியும்" என்றார்.

மழை வெள்ளத்துக்கு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பதிலளித்த அவர், "எவ்வளவு மழை பெய்தாலும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டு உள்ளது. எந்தவித பாதிப்பும் இல்லாமல் வடகிழக்கு பருவமழையை நாங்கள் சமாளிப்போம்" என்று கூறினார்.

பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பு

டெங்குவை பரப்பும் கொசுவை அழிக்க உள்ளாட்சித்துறையும் மக்கள் நல்வாழ்வுத் துறையும் உரிய நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் நாடு முழுவதும் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் குறித்த தீர்வை அரசு பரிசீலித்துவருவதாகவும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: டெல்லியில் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் வேலுமணி சந்திப்பு!

ABOUT THE AUTHOR

...view details