தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எட்டாக் கனியான விமான பயணம் ஏழைகளுக்கும் சாத்தியம் - சென்னை விஜிபி தமிழ்ச்சங்கம் - நடிகர் ஆரி

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகள், பார்வையற்றவர்கள், திருநங்கைகள் என 60 பேரை விமானத்தில் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளனர்.

.
.

By

Published : Dec 23, 2021, 1:01 PM IST

சென்னை: சென்னையிலிருந்து மதுரைக்கு விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று ஆதரவற்றோர், பார்வையற்றோர் போன்றோர்களை நான்காவது ஆண்டு ஏற்பாடாக விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளது.

சென்னை, புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஆதரவற்ற ஏழை குழந்தைகள் 30 பேர், பார்வையற்றோர், திருநங்கைகள், நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி, தன்னார்வலர்கள் என 60 பேர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு ராமேஸ்வரம், தனுஷ்கோடி, மதுரை ஆகிய பகுதிகளில் சுற்றிப் பார்த்தனர்.

பின்னர் மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துவரப்பட்டனர். குழந்தைகளுடன் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் தலைவர் வி.ஜி. சந்தோசம், மாநிலத் திட்டக் குழு உறுப்பினர் சுல்தான் அகமது இஸ்மாயில், நடிகர் ஆரி அர்ஜுனன், விஜிபி உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் ராஜதாஸ், பின்னணிப் பாடகர் வேல்முருகன், தன்னார்வ அமைப்பு நிர்வாகி அரவிந்த் ஜெயபால் ஆகியோர் வந்தனர்.

ஏழைகளின் எட்டாக் கனவைச் சாத்தியமாக்கினோம்

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி. சந்தோசம் செய்தியாளரிடம் கூறுகையில், "தனியார் அமைப்பான ரெயின் டார்பசுடன் விஜிபி தமிழ்ச்சங்கம் இணைந்து 30 ஆதரவற்ற குழந்தைகள் சுற்றுலா அழைத்துவரப்பட்டுள்ளனர்.

மதுரையிலிருந்து விமானம் மூலம் குழந்தைகள் கிறிஸ்துமஸ் உடையுடன் பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் அவர், ஏழை எளிய மாணவர்களுக்குத் தேவையான உதவி செய்யத் தயாராக இருப்பதாகவும் அன்பு பாசத்துடன் அனைவரும் வாழ வேண்டும்" என்று தெரிவித்தார்.

நடிகர் ஆரி பேசுகையில், "விமானத்தில் பறந்துசெல்லும்போது யாரை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதை முடிவுசெய்ய வேண்டும். வானத்திற்கும் கடலுக்கும் எல்லை இல்லை. அதுபோல் கனவுக்கும் எல்லை இல்லை.

ஆனால், குழந்தைகளின் கனவான விமான பயணம் பூர்த்தியாகி உள்ளது. கிறிஸ்துமஸ் நாளை முன்னிட்டு குழந்தைகளுடன் வந்தது மகிழ்ச்சி தந்தது என்று விமானி தமிழில் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது" எனக் கூறினார்.

விமான பயணம்

இதையும் படிங்க: Hockey National Junior Championship: காலிறுதியில் வெளியேறியது தமிழ்நாடு!

ABOUT THE AUTHOR

...view details