தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.400 கோடி

தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ. 400 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

organic-farming-announcement-in-tamil-nadu-agriculture-budget-2022-23
organic-farming-announcement-in-tamil-nadu-agriculture-budget-2022-23

By

Published : Mar 19, 2022, 10:46 AM IST

தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக வேளாண் துறைக்கென தனி வேளாண் பட்ஜெட்2022-2023 தாக்கல் செய்யப்பட்டுவருகிறது. தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரை தொடங்கினார்.

அப்போது அமைச்சர் கூறுகையில், தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ. 400 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அதன்மூலம் 30,000 மெட்ரிக் டன் அளவில் நெல் பயிர் வகைகள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும். அதற்காக தமிழ்நாட்டில் 29 மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அங்கு காலநிலை மாற்றத்தைத் தாங்கி வளரும் பயிர்களைச் சாகுபடி செய்வது ஊக்குவிக்கப்படும். சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் அறிவிப்பு : உடனுக்குடன் ...

ABOUT THE AUTHOR

...view details