தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மின்வாரிய காலிப்பணியிடம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு - மின்வாரிய காலிபணியிடம்

மின்வாரியத்தில் நிரப்பப்படாமல் இருக்கும் காலிப் பணியிடங்கள் குறித்து அறிக்கை சமர்பிக்க, சுற்றறிக்கையைத் தலைமை துணை பொறியாளர் அனுப்பி உள்ளார்.

TNEB
TNEB

By

Published : Oct 20, 2021, 7:39 PM IST

சென்னை: மின்வாரியத்தில் நிரப்பப்படாமல் உள்ள அனுமதிக்கப்பட்ட காலிப்பணியிடங்கள், நிரப்ப உள்ள புதிய பணியிடங்களை அட்டவணைப்படுத்தி அறிக்கை அனுப்ப ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உதவியாளர், கணக்கீட்டாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 56ஆயிரம் பணியிடங்கள் உடனே நிரப்பப்பட வேண்டிய தேவை உள்ளதாக, ஏற்கெனவே அமைச்சர் தெரிவித்து இருந்தார்.

கடந்த ஆண்டு புதிய பணியாளர்களைத் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகிய நிலையில், கரோனா காரணமாக ஆள் தேர்வு நடைபெறவில்லை.

இந்த நிலையில், புதிய அரசு அமைந்து உள்ள நிலையில், பழைய அரசாணையை ரத்து செய்து, புதிய அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: மின்வாரிய பணியாணை வழக்கு! - வாரியத்தலைவர் பதிலளிக்க உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details