தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பள்ளிகள் திறக்கும்போது அரசு வழிமுறைகளை பின்பற்ற உத்தரவு

சென்னையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கும்போது, அரசு வெளியிடும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை தனியார் பள்ளிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் அறிவுரை வழங்கினார்.

பள்ளிகள் திறக்கும்போது அரசு வழிமுறைகளை பின்பற்ற உத்தரவு
பள்ளிகள் திறக்கும்போது அரசு வழிமுறைகளை பின்பற்ற உத்தரவு

By

Published : Aug 25, 2021, 10:02 PM IST

Updated : Aug 26, 2021, 8:55 PM IST

சென்னை:மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளி முதல்வர்களுடன் பள்ளிகள் திறக்கும்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தலைமையில் இன்று (ஆக. 25) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அவர் பேசும்போது, "தனியார் பள்ளிகளில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி சுத்தமாக வகுப்பறைகளை வைத்திருக்க வேண்டும். போதுமான அளவு கிருமி நாசினி, கை கழுவும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

ஆறு தவணைகளாக கட்டணம்

மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி அமரும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளியில் பெற்றோர்கள் அதிக அளவில் கூட்டமாக வராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் கட்டணத்தை ஆறு தவணைகளாக பெற்றோரின் விருப்பத்தின் அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம்.

தொடர் அங்கீகாரம் பெறாத பள்ளிகள் தங்களுக்கான தொடர் அங்கீகாரத்தை சான்றிதழ்களுடன் சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

மாணவர்களின் விபரங்களை கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் முழுவதுமாக பதிவேற்றம் செய்யவேண்டும்.

பிற மாநிலங்களில் பள்ளிகள் திறந்து பின்னர் நோய்த்தொற்றின் காரணமாக மூடப்பட்டது. அது போன்ற நிலைமை தமிழ்நாட்டில் ஏற்படாத வகையில், முழுமையாக விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண்கள் வெளியீடு'

Last Updated : Aug 26, 2021, 8:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details