சென்னை: திருவொற்றியூர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில், 24 வீடுகள் கொண்ட ஒரு பிளாக் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி இடிந்துவிழுந்து தரைமட்டமானது. முன்னெச்சரிக்கையாக, அனைவரும் வெளியேற்றப்பட்டுவிட்டதால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
கட்டடம் பலவீனமாக உள்ளதாகத் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலர்களுக்குப் புகார் அளிக்கப்பட்டதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என குடியிருப்புவாசிகள் தெரிவித்திருந்தனர்.