சென்னை:கரோனா தொற்று ஆரம்பித்தபோது நீதிமன்ற வழக்கு விசாரணை முழுவதும் இணையதளம் வாயிலாக நடத்தப்பட்டது. தொற்றின் விகிதம் குறையத் தொடங்கியதும் நேரடி, காணொலி அழைப்பின்மூலம் விசாரணை என கலப்பு விசாரணை முறை தற்போது அமலில் உள்ளது.
சமீபத்தில் நீதிமன்ற விசாரணையின்போது நீதிபதி ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருக்கையில்,
கேமரா ஆனில் இருந்தது தெரியாமல் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வழக்கறிஞர் ஒருவர்
பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது சக வழக்கறிஞர்கள், நீதித்துறை வட்டாரத்தில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
'கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்கமுடியாது'
இந்தக் காட்சிகளை சிலர் பதிவு செய்ததால் இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ள நீதிபதிகள் பி.என் பிரகாஷ், ஹேமலதா அமர்வு, சம்மந்தப்பட்ட வழக்கறிஞரை தொழில் செய்ய தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
இது போன்ற சம்பவங்களை கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கைப் பார்க்க முடியாது எனத் தெரிவித்துள்ள நீதிபதிகள், சம்மந்தப்பட்ட காட்சிகளை சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை டிசம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை தொழில் செய்யத் தடை விதித்து தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க:Andipatti nurse murder case: தற்கொலை செய்துகொண்ட குற்றவாளி