தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நலத்திட்ட உதவிகள் - OPS welfare assistance for Jayalalithaa birthday

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு ஓபிஎஸ் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு ஓபிஎஸ் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

By

Published : Feb 24, 2020, 9:38 PM IST

தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழா சென்னை பாடியில் உள்ள திருவலிதாயம் சிவன் கோயிலில் கொண்டாடப்பட்டது. மேலும் பிறந்தநாளை முன்னிட்டு கோயிலில் சிறப்பு வழிபாடுகள், திருமுழுக்கு நடைபெற்றது.

அம்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பெஞ்சமின், கே. பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு ஓபிஎஸ் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

இதனைத் தொடர்ந்து 50 பேருக்கு தையல் இயந்திரம், 25 பேருக்கு இஸ்திரி பெட்டி, 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அத்துடன் மூன்றாயிரம் ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க:

இந்தியாவுடன் 300 கோடி டாலர் ராணுவ ஒப்பந்தம் - ட்ரம்ப் அறிவிப்பு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details