அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கூட்டம் நாளை நடக்க இருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை டெல்லி செல்லவுள்ளார். இதில் தமிழ்நாட்டிற்கு நிலுவையிலுள்ள நிதி, புதிய திட்டங்களுக்கான நிதி உள்ளிட்டவை குறித்து கோரிக்கை வைப்பார் என்று தெரிகிறது. நாட்டில் கடும் பொருளாதார நிதி நெருக்கடி நிலவிவரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.