சென்னை:பசுமைவழி சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் தென்சென்னை வடக்கு மாவட்ட துணை செயலாளர் மற்றும் சசிகலா ஆதரவாளர் ஆவின் வைத்தியநாதன் நேற்று சந்தித்தார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஆவின் வைத்தியநாதன், "தனியார் காட்சி ஊடகத்தை பாரதிய ஜனதா கட்சிக்கு சி.வி.சண்முகம் தாரைவார்த்துவிட்டார். ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி வந்தால் அதிமுகவையும் பாரதிய ஜனதா கட்சியிடம் தாரைவார்த்து விடுவார்கள். இதற்காக சி.வி.சண்முகத்திற்கு மத்திய அமைச்சர் பதவி தருவதாக ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த தனியார் காட்சி ஊடகமானது அதிமுகவிற்கு சொந்தமானது ஆகும். கே.பி.முனுசாமி முன்பு ஓபிஎஸ் பக்கம் இருந்தார். தற்போது ஈபிஎஸ் பக்கம் சென்றுள்ளார்.