நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவிவரும் நிலையில், அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டமானது டெல்லியில் நடக்க உள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில், அனைத்து மாநில நிதியமைச்சர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் நேற்று மாலை டெல்லி சென்றார்.
இதில் தமிழ்நாட்டிற்கு நிலுவையிலுள்ள நிதி, புதிய திட்டங்களுக்கான நிதி உள்ளிட்டவை குறித்து துணை முதலமைச்சர் ஓபிஎஸ், மத்திய நிதியமைச்சரிடம் கோரிக்கை வைப்பார் என்று தெரிகிறது. துணை முதலமைச்சருடன் தமிழ்நாடு நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர் கிருஷ்ணன் உள்ளிட்டோரும் டெல்லி சென்றுள்ளனர்.
டெல்லியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இதையும் படிங்க: மாணவர்கள் போராட்டம் எதிரொலி: சென்னை பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை!