சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வள்ளீஸ்வரன் தோட்டம் குடிசைமாற்று குடியிருப்பில் உள்ள வீடுகள் பழுதடைந்து நிலையில் காணப்படுவதால், இதனை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட அரசு முடிவு எடுத்ததுள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்தப் பகுதியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், இப்பகுதியிலுள்ள வீடுகள் மிகவும் சேதமடைந்துள்ளதால் புதிய வீடுகள் கட்டித்தரப்படவுள்ளதாகவும் 200 சதுரஅடி உள்ள வீடுகளை இடித்து 400 சதுரஅடி உள்ள புதிய வீடுகளாக கட்ட ரூ. 69 கோடி ஒதுக்கப்பட்டு ஓராண்டிற்குள் கட்டித்தர அரசு முடிவு செய்துள்ளதாகவும் அவர்கள் வெளியில் தங்கியிருக்கும் காலத்தில் குடும்பத்திற்கு 8000 ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "2023 தொலைநோக்குத் திட்டத்தின்படி அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் மூலம் 75 ஆயிரம் கோடி அளவிற்கு மக்களுக்கு தரமான வீடுகள் கட்டப்பட்டுவருகிறது. இதுவரை ஆறு லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன" என்றார்.
பின்னர் செய்தியாளர்களின் இடைத்தேர்தல் குறித்த கேள்வி ஒன்றுக்கு, விக்கிரவாண்டித் தொகுதியை என்று சொல்வதற்கு பதிலாக 'வீரபாண்டி' என மாற்றிப் பேசினார். பின்னர் அதனைத் திருத்திப் பேசாமல் அப்படியே பேச்சைத் தொடர்ந்த அவர், நாங்குநேரி தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல இயக்கங்கள், கட்சிகளிடம் ஆதரவை கேட்டுள்ளோம்.