சென்னை:கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற ஒரு நீதிபதி கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. பின்னர் இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதி கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அப்பொழுது ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. தற்போது, இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு முன்பே, எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவானது தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.