சென்னை:தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. இதனைத்தொடர்ந்து, மின் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று (ஜூலை 19) அறிவித்தார். மின்சார வாரிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற துறை ரீதியான ஆய்வுக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து, மின்கட்டணத்தை உயர்த்தும் தமிழ்நாடு அரசின் முடிவை கண்டித்து பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் மின்கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்கள் மீது ஏற்கனவே சொத்து வரியை உயர்த்தி சுமை ஏற்றிய விடியா அரசு, தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தி மக்கள் தலையில் கடும் சுமையை சுமத்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது" என பதிவிட்டுள்ளார்.