சென்னை:தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன் இதே மருத்துவமனையில் குடல் இறக்கத்திற்கான அறுவை சிகிச்சை செய்துகொண்ட பழனிசாமி, இது தொடர்பான பரிசோதனைக்காக மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார்.