தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அமைச்சருக்கு துரைமுருகன் பாராட்டு - மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை

சென்னை: சட்டப்பேரவை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது அமைச்சர் தங்கமணியை பாராட்டி எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசினார்.

thangamani
thangamani

By

Published : Mar 13, 2020, 5:21 PM IST

சட்டப்பேரவையில் இன்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில், அமைச்சர் தங்கமணி பதிலுரை முடித்த பிறகு எழுந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், ”கையில் துண்டு காகிதம்கூட இல்லாமல் அமைச்சர் தங்கமணி பதிலளித்துப் பேசினார். இந்த பாராட்டு எல்லாம் அவருக்குத்தானே தவிர அவர் துறைக்கு அல்ல. இதேபோன்று எங்களது உறுப்பினர்கள் பேசும் போதும் அமைச்சர்கள் குறிக்கிடாமல் இருந்து நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும் “ என்றார்.

உடனே குறுக்கிட்ட முதலமைச்சர் பழனிசாமி, ” உடனுக்குடன் பதில் அளித்தால் மட்டுமே செய்தித்தாள்களில் வரும். இல்லையென்றால் அவை வராது. அதனால்தான் அமைச்சர்கள் குறுக்கீடு செய்து வருகின்றனர் ” என்றார்.

இதையும் படிங்க: விவசாயத்திற்கு 50 ஆயிரம் புதிய இலவச மின் இணைப்பு - பேரவையில் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details