தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கந்துவட்டி கொடுமைகளைத் தடுக்க "ஆபரேஷன் கந்துவட்டி" - டிஜிபி அதிரடி உத்தரவு! - டிஜிபி சைலேந்திரபாபு

கந்துவட்டி கொடுமையால் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்டதன் எதிரொலியாக, கந்துவட்டி கொடுமைகளை தடுக்க ’ஆபரேஷன் கந்துவட்டி’ நடத்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

kanthuvatti tragedy
kanthuvatti tragedy

By

Published : Jun 8, 2022, 4:57 PM IST

சென்னை: கடலூரில் கந்துவட்டிக் கொடுமை காரணமாக ஆயுதப்படை காவலர் செல்வகுமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் எஸ்.பிக்களுக்கு தமிழ்நாடு காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

அதில், "தமிழ்நாட்டில் அதிகப்படியான கந்துவட்டி வாங்கும் நபர்களைக் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க 'ஆபரேஷன் கந்துவட்டி' ஆய்வினை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, கந்துவட்டி தொடர்பாக காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள புகார்களை உடனடியாக எடுத்து சட்ட ஆலோசனைக்கு அனுப்பி, அதன் பின்பு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று கந்துவட்டி வசூலிக்கும் அலுவலகத்தை சோதனை செய்து, வழக்குத் தொடர்பான ஆவணங்கள், காசோலைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'அடுத்த 10 ஆண்டுகள் மாநிலம் தழுவிய பயணம்'- எடியூரப்பா திடீர் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details