தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'பள்ளத்தாக்கு பெரியாறு பிரதான கால்வாய் பாசன வசதிக்காக தண்ணீர் திறப்பு' - Canal Irrigation Facility

பள்ளத்தாக்கு பெரியாறு பிரதான கால்வாய் பாசன வசதிக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது எனவும், சிக்கனமாகப் பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

cm
cm

By

Published : Aug 30, 2020, 6:45 AM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின்கீழ் உள்ள இருபோக பாசன பகுதியில் முதல்போக பாசன பரப்பான 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட விவசாய பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாயப் பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று, தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின்கீழ் உள்ள இருபோக பாசன பகுதியில் முதல்போக பாசன பரப்பான 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலத்திற்கு,
நாளொன்றுக்கு 900 கனஅடி வீதம், 45 நாள்களுக்கு முழுமையாகவும், 75 நாள்களுக்கு முறைவைத்தும், மொத்தம் 120 நாள்களுக்கு 6739 மி.க. அடி தண்ணீரினை ஆகஸ்ட் 31 (நாளை) முதல் வைகை அணையிலிருந்து திறந்துவிட நான் உத்தரவிட்டுள்ளேன்.

இதனால் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details