சென்னை: வடசென்னையின் முக்கியப் போக்குவரத்து சந்திப்பான ஜி.என்.டி, கொல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்திருந்த காவல் உதவி மையம், 2010ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் குறை தீர்க்கும் இடமாக செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது பெருகி வரும் வாகனப்போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு, சிசிடிவி, ஏஎன்பிஆர் கேமராக்களை கண்காணிக்கும் நவீன காவல் கண்காணிப்பு நிலையமாக மாற்றம் செய்து புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது.
இதனை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று (ஜூலை 1) திறந்து வைத்தார். இந்த மையத்தில் மாதவரம் பகுதியில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் கண்காணிக்கப்படுகின்றன. மொத்தமாக 60க்கும் மேற்பட்ட சிசிடிவி, 4 ஏஎன்பிஆர் (Automatic number-plate recognition) கேமராக்கள் ஆகியவை இங்கு கண்காணிக்கப்பட இருக்கின்றன.