தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆன்லைன் சூதாட்டத்திற்கு வருகிறது தடை - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - சென்னை மாவட்ட செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒரு மணி நேரம் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடை உள்ளிட்ட சில முக்கிய நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு வருகிறது தடை
ஆன்லைன் சூதாட்டத்திற்கு வருகிறது தடை

By

Published : Jun 27, 2022, 10:35 PM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து துறை அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு, மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடை, சென்னையில் முதல் முறையாக நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா, நிறைவு விழா என போட்டியை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது, பருவமழை தொடங்க உள்ள நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மேகதாது அணை விவகாரம், சமீபத்தில் தமிழகத்தில் அதிகரித்துவரும் கரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் சட்டப்பேரவையில்அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் தற்போதைய நிலை மற்றும் அத்திட்டங்களை முறையாக விரைவில் செயல்படுத்துவது, சென்னையில் இரண்டாம் கட்ட விமான நிலையம் அமைப்பது உள்ளிட்ட அரசின் கொள்கை முடிவுகள் ஒப்புதல் அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் மிக முக்கியமாக சமீப காலமாக அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு குரல் கொடுத்து வரும் ரம்மி ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டு, தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடை என்ற அவரச சட்டம் இந்த கூட்டத்தில் அமைச்சர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு கடந்த மார்ச் 5 ஆம் தேதியும் முதல் அமைச்சரவை கூட்டமும் இரண்டாவது முறையாக இன்றும் கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வழக்கறிஞருடன் ஓபிஎஸ் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details