தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொறியியல் படிப்பு ஆன்லைன் பதிவு தொடக்கம்; விண்ணப்பிக்கும் முறை - முழு விவரம்! - பொறியியல் கலந்தாய்வு

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளது. மேலும், முதன்முறையாக மாநிலத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளின் பெயர் மற்றும் முகவரி ஆகியவையும் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்பு ஆன்லைன் பதிவு தொடக்கம்
பொறியியல் படிப்பு ஆன்லைன் பதிவு தொடக்கம்

By

Published : Jun 20, 2022, 8:18 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் 12ஆம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜுன் 20) வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து ஏற்கனவே அறிவித்தபடி பொறியியல் படிப்பில் இளநிலையில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு https://www.tneaonline.org/என்ற இணையதள முகவரியில் தொடங்கியது.

மேலும், மாணவர்கள் சொந்தமாகவும், தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாகவும், பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையத்திற்கு சென்றும் விண்ணப்பிக்கலாம். இதற்காக 110 மையங்கள் மாவட்டத்துக்குக் குறைந்தபட்சம் 2 இடங்கள் என்ற அடிப்படையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கைக்கான இணையதளத்தில் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பம் செய்வதற்கு உரிய சேவை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ள இடங்கள் விவரங்கள், விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ் விவரங்கள், கலந்தாய்வு எவ்வாறு நடைபெறும் என்பது குறித்த முழுமையான விவரம், கல்லூரிகளில் விவரங்கள் அடங்கிய தகவல் கையேடு உள்ளிட்ட விவரங்களும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு: மேலும், முதன்முறையாக மாநிலத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளின் பெயர் மற்றும் முகவரி ஆகியவையும் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அரசு பள்ளியில் பயின்றவர்கள் என்ற விவரமும் விண்ணப்பத்தின்போதே கேட்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எளிதில் வழங்குவதற்காக இந்த தகவல் கூடுதலாக சேகரிக்கப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம்:ஆன்லைன் விண்ணப்பப் பதிவிற்கு பட்டியலின மாணவர்களுக்கு 250 ரூபாயும், இதர சமூக மாணவர்களுக்கு 500 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரேண்டம் எண் எப்போது?: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19 கடைசி நாளாகும். இதையடுத்து அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) ஜூலை 22ஆம் தேதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஆகஸ்டில் தரவரிசை பட்டியல்: அதனைத் தொடர்ந்து, விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஜூலை 20ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை சேவை மையங்களின் மூலமாக நடைபெறும். மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியிடப்படும்.

கலந்தாய்வு விவரம்:மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர், விளையாட்டு ஆகிய 3 பிரிவினருக்கும் ஆக. 16 முதல் 18ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். பொதுக்கல்வி , தொழில்முறைக் கல்வி, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு ஆகிய 3 பிரிவினருக்கும் ஆக. 22ஆம் தேதி முதல் அக். 14ஆம் தேதி வரை நடைபெறும்.

மேலும் சந்தேகங்களுக்கு...: இதையடுத்து துணைக் கலந்தாய்வு அக்டோபர் 15, 16 ஆகிய நாள்களில் நடைபெறும். அருந்ததியர் பிரிவில் காலியாக உள்ள இடங்களில் ஆதிதிராவிடர் பிரிவு வகுப்பினருக்கான கலந்தாய்வு அக்டோபர் 17,18ஆம் தேதிகளில் நடைபெறும். மேலும், பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை குறித்த சந்தேகங்களுக்கு 0462-2912081, 82, 83, 84 & 85;044-22351014; 044-22351015 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க:10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details