சென்னை: சென்னை மேற்கு தாம்பரம் ராஜாஜி சாலையில் உள்ள பிரபல திரையரங்கம் எதிரே சைக்கிள் கடையில் ஆன்லைனில் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக தாம்பரம் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
உடனடியாக போலீசார் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கடையில் இருந்த இருவர் செல்போன் மூலம் ஆன்லைனில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், நுாதன முறையில் பல மாதங்களாக லாட்டரி டிக்கெட் விற்பனை நடந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட தந்தை நாராயணன் (62), அவரது மகன் ஜெயக்குமார்(32) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: நகைக்கடை மேலாளருக்கு மிரட்டல் விடுத்ததாக காவல் ஆய்வாளர் உட்பட மூவர் மீது புகார்!