தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'ஆன்லைன் விளையாட்டுகளால் திறன்கள் மேம்படுவதாக சொல்லப்படுவது தவறானது' - ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அறிக்கை

ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவின் 71 பக்க அறிக்கையில், ஆன்லைன் விளையாட்டுகளால் திறன்கள் மேம்படுவதாக சொல்லப்படுவது தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

71 பக்க அறிக்கையில் தகவல்
71 பக்க அறிக்கையில் தகவல்

By

Published : Jun 28, 2022, 4:13 PM IST

சென்னை: ஆன்லைன் ரம்மியின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு, அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் நேற்று வழங்கினர். இந்நிலையில் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 71 பக்க அறிக்கையில், ஆன்லைன் விளையாட்டுகளால் திறன்கள் மேம்படுவதாக சொல்லப்படுவது தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் மட்டும் தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்து 17 பேர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் உடல் நலம் இந்த விளையாட்டுக்களால் பாதிக்கப்படுகிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இயல்பு நிலையில் வாழ்வதற்கு எதிராக ஆன்லைன் விளையாட்டுகள் இருக்கின்றன.

இந்திய அரசியல் சாசனம் 252 பயன்படுத்தி மத்திய அரசு தேசிய அளவில் ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. அதேபோல இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் தமிழக அரசு மேல்மறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டத்தில் இந்த கமிட்டியின் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. நேற்று கொடுத்த சந்துரு கமிட்டியின் அறிக்கையை பல்வேறு அரசுத் துறைகள் மூலம் பரிசீலனை செய்யப்பட்டு இருக்கிறது. ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது இயலாத ஒன்று என்பதால் அதை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொண்டு வரப்பட்ட சட்டத்தை கைவிட்டுவிட்டு புதிய சட்டத்தை கொண்டு வரவேண்டும் எனவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அதிமுக பொதுக்குழு - நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்த ஓபிஎஸ் தரப்பு

ABOUT THE AUTHOR

...view details