தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிக விலை கொடுத்தாலும் கிடைப்பது அழுகிய வெங்காயம் தான்...! - வெங்காய விலை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையிலும், சின்ன வெங்காயம் 60 முதல் 110 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனை கடைகளில் கூடுதல் விலை கொடுத்தாலும் நல்ல வெங்காயம் கிடைப்பதில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

onion price soars
onion price soars

By

Published : Oct 21, 2020, 10:35 PM IST

சென்னை:மழை காரணமாக வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ள நிலையில் நகரின் பல்வேறு பகுதிகளிலும் தரம் குறைவான வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.

சில நாட்களாக வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிமரத்துக்கு ஆளாகியுள்ளனர். அத்தியாவசிய பொருளான வெங்காயம் இல்லாமல் சமையல் செய்வது கடினமாக உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். அதிக விலை கொடுத்தாலும் அழுகிய நிலையிலேயே வெங்காயம் கிடைப்பதாகவும், வெங்காயத்தை தேர்ந்தெடுத்து வாங்க, வியாபாரிகள் அனுமதிப்பதில்லை என்றும் அவர் புலம்புகிறார்கள்.

பொதுவாகவே மழைக்காலங்களில் வெங்காயத்தின் விலை உயர்வது இயல்பான ஒன்றுதான் என்கிறார் 20 ஆண்டுகளாக தேனாம்பேட்டை சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வரும் குபேந்திரன். இது தொடர்பாக தொடர்ந்து பேசிய அவர், மழைக்காலம் குறைந்து புதிய வெங்காயம் சந்தைக்கு வந்ததும், அதன் விலை படிப்படியாக குறையும். கடந்த வாரம் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் தற்போது 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு மூட்டை வெங்காய் 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 4,500 ரூபாயாக அதிகரித்துள்ளது. நாளொன்றுக்கு வெங்காய மூட்டையின் விலை 500 ரூபாய் அதிகரிக்கிறது. அதாவது ஒரு கிலோவுக்கு 20 ரூபாய் நாள்தோறும் உயர்கிறது. விலை உயர்வு காரணமாக மக்கள் வெங்காயம் வாங்க அஞ்சுகிறார்கள். இந்த விலை உயர்வு இரண்டு மாதங்கள் நீடிக்கும். மழை குறைந்து இயல்பு நிலை திரும்பினால், வெங்காயத்தின் விலை குறையும்” என்று கூறினார்.

வெங்காய விலை குறித்து வியாபரி, வாடிக்கையாளர் கூறும் கருத்து

கேயம்பேடு காய்கறி சந்தையில் மொத்தவிலை வெங்காய வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் பாஷா பேசுகையில், கோயம்பேடு சந்தைக்கு 100 வண்டியில் வெங்காயம் வரும் இடத்தில், தற்போது 20 வண்டிகள்தான் வருகிறது. தற்போது எகிப்திலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு கோயம்பேடு சந்தைக்கு வந்துள்ளது. வரத்து குறைவால் சந்தையில் தேவை அதிகரித்துள்ளது. இதனால் தான் விலையேற்றம் என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details