தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆலந்தூர் மெட்ரோ ரயில்நிலையப் பெயர்ப்பலகை சாலையில் விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

ஆலந்தூர் மெட்ரோ அருகே வழிகாட்டி பெயர்ப்பலகை மீது மாநகரப்பேருந்து மோதிய விபத்தில், பெயர்ப்பலகை அடியோடு பெயர்ந்து சாலையில் சென்றவர் மீது விழுந்தது. அதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நபர் இன்று காலை சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலைய பெயர் பலகை சாலையில் விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலைய பெயர் பலகை சாலையில் விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

By

Published : Aug 8, 2022, 5:06 PM IST

சென்னை: ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ராட்சத அளவில் இருக்கும் பெயர்ப்பலகையின் மீது நேற்று காலை தடம் எண் 70V கோயம்பேடு வரை செல்லும் பேருந்து மோதியது. இதனால் பெயர்ப்பலகை அடியோடு சரிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளைஞர் படுகாயமடைந்தார்.

பலத்த காயமடைந்த தண்டையார்பேட்டை பகுதியைச்சேர்ந்த 30 வயது உடைய இளைஞர் சண்முகசுந்தரத்தை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று(ஆக. 8) காலை சிகிச்சைப்பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் நேற்று விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய மாநகர அரசுப்பேருந்து ஓட்டுநர் ரகுநாதன், நடத்துநர் சின்னையா இருவரும் சுமார் இரண்டு மணி நேரம் கழித்து, பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

அவர்கள் மீது அதிவேகமாக வாகனத்தை இயக்கியது, பொதுமக்களுக்கு காயம் ஏற்படுத்தியது, பொருட்களை சேதப்படுத்தியது, என நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து எஃப்.ஐ.ஆர் போடப்பட்டு, பின் நேற்று இரவே காவல்துறையினரின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால், தற்பொழுது விபத்தில் சிக்கிய சண்முகசுந்தரம் உயிரிழந்த நிலையில், எஃப்.ஐ.ஆர் திருத்தம் செய்து 304A அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிர் இழப்பு ஏற்படுத்துதல்பிரிவின்கீழ் வழக்கு மாற்றியமைக்கப்பட்டு, பேருந்து ஓட்டுநர் ரகுநாதன், நடத்துநர் சின்னையா இருவரையும் சிறையில் அடைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கர்நாடகாவில் கட்டடம் கவிழ்ந்து விபத்து!

ABOUT THE AUTHOR

...view details