தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கான வாக்கு மையங்களில் ஒருவர்கூட வாக்களிக்கவில்லை! - சென்னை வாக்கு மையங்கள்

சென்னை: பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கென தனியாக அமைக்கப்பட்ட வாக்கு மையங்களில், ஒருவர்கூட வாக்களிக்க வரவில்லை.

கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைக்கப்பட்ட வாக்கு மையங்களில் ஒருவர்கூட வாக்களிக்கவில்லை
கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைக்கப்பட்ட வாக்கு மையங்களில் ஒருவர்கூட வாக்களிக்கவில்லை

By

Published : Apr 7, 2021, 7:11 AM IST

நேற்று (ஏப். 6) தமிழ்நாடு முழுவதும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிமுதல் இரவு 7 மணிவரை நடைபெற்றது. இதற்காக அனைத்துத் தரப்பு மக்களும் ஆர்வமுடன் வாக்களித்துவந்தனர்.

கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைக்கப்பட்ட வாக்கு மையங்களில் ஒருவர்கூட வாக்களிக்கவில்லை

மேலும், கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு மாலை 6 மணிமுதல் 7 மணிவரை வாக்களிக்கத் தனியாக வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து, பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் கரோனா தொற்றுப் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்கத் தனியாக வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டன.

இந்த வாக்களிக்கும் மையங்களில் கரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர்கூட இரவு 7 மணிவரை வாக்களிக்க வரவில்லை எனத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:'இளம் தலைமுறையினர் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்'

ABOUT THE AUTHOR

...view details