தமிழ்நாட்டில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை மாநிலச் சுகாதாரத் துறை உறுதிசெய்துள்ளது. அதன் ட்விட்டர் பக்கத்தில், சென்னையைச் சேர்ந்த 25 வயது நபருக்கு கரோனா தொற்று இருப்பதாகவும், தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி! - one more corona case in taminadu
சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் மட்டும் 4 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
one more corona case in taminadu
இதன்மூலம் தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 4 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.